முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை உடைத்ததிலோ அல்லது அதனை மீள அமைப்பதிலோ
அரசாங்கத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லையென அமைச்சரவைப் பேச்சாளர் உதய
கம்மன்பில தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவிக்கையிலேயே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டதையடுத்து, மாணவர்கள் மற்றும் பலரின் கண்டன போராட்டத்தின் பின்னர் இடித்தழிக்கப்பட்ட தூபிக்கான அடிக்கல் மீண்டும் அதே இடத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் இணைந்து நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே அரசாங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment