சாதாரண மக்கள் மாத்திரமல்ல அரசாங்கத்தின் அமைச்சரான தானும் கடும் வெறுப்பில் இருந்து வருவதாக மின்வலு அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறை, தேவேந்திர முனையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மகளிர் அணியின் அதிகார சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.மிகப் பெரிய பல பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இதனால், அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது.
அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டாம் எனக் கூற எவருக்கும் உரிமையில்லை எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment