• Latest News

    February 14, 2021

    நேற்று மு.கா உயர்பீடத்தில் நடந்தது என்ன?.... பாகம்: 01

    A.L.Thavam -

    கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் “கட்சியினதும் சமூகத்தினதும் எதிர்பார்ப்பிற்கும் நம்பிக்கைக்கும் மாற்றமாக - 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக கையுயர்த்தியது தொடர்பில் - தமது விளக்கத்தை எழுத்து மூலம் தருமாறு” தலைவரினால் - 20 ஆவது திருத்தத்தை ஆதரித்த மு.கா எம்.பிக்கள் 04 பேரிடமும் கேட்கப்பட்டிருந்தது.

     ஆனால், அவ்வாறு 31 ஆம் திகதி அவர்கள் விளக்கம் வழங்காமல் - தங்களுக்கு ஜனவரி 31 வரை விளக்கம் வழங்குவதற்கு கால அவகாசம் வழங்குமாறு கேட்டு 04 எம்.பிக்களும் கடிதம் எழுதி இருந்தனர். அதன் பிரகாரம் ஜனவரி 31 ஆம் திகதி ஆகியும் விளக்கம் வழங்கப்படவில்லை.
     
    இதற்கிடையில், தாங்கள் செய்த தவறினை ஏற்று - இத்தவறுக்கான முதல் கட்ட “சுய தண்டணையாக” கட்சியின் பதவிகளிலிருந்து தாமாக விலகிக்கொள்வதாக - தௌபீக் எம்.பி மற்றும் பைசால் காசிம் எம்.பி என இருவரும் தமது பதவிகளிலுருந்து தாமாக விலகுவதாக தலைவருக்கு அறிவித்திருந்தனர். அதற்கான ஆவணமும் செயலாளர் வசம் உள்ளதாக நேற்று உயர்பீடக்கூட்டத்தில் கூறப்பட்டது.
     
    இது இவ்வண்ணமிருக்க, 20 க்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் எழுத்து மூலம் விளக்கம் வழங்குவதற்கு - எம்.பிக்கள் தாமாக கேட்ட கடந்த ஜனவரி 31 ஆம் திகதி கூட கடந்தும் - எழுத்து மூலம் விளக்கம் வழங்காமை தொடர்பில் உயர்பீடத்திற்கு அறிவித்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்லும் நோக்கிலேயே - நேற்றைய உயர்பீடக் கூட்டம் கூட்டப்பட்டது. 
     
    20 க்கு கையுயர்த்தியமை தொடர்பில் - மொத்தமாக கட்சியையும் தலைமையும் சேர்த்து மக்கள் தவறாக விமர்சிப்பதற்கும் - முஸ்லிம் அடையாள அரசியல் நிறுவனங்களின் மீது வெறுப்புமிழ்வதற்கும் - முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவே - நேற்றைய உயர்பீடக் கூட்டம் கூட்டப்பட்டது. இது தொடர்பிலாக இதுவரை நடந்த விடயங்கள்- கூட்ட ஆரம்பித்தில் தலைவரால் முன்வைக்கப்பட்டதோடு - பல உயர்பீட உறுப்பினர்களினால் காத்திரமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. 
     
    20 ஆவது சரத்திற்கு ஆதரவு செய்வதாக இருந்தால் அரசாங்கத்திடம் முன்வைக்கவேண்டும் என்று உயர்பீடத்தினால் கூறப்பட்ட நிபந்தனைகள் - எந்த முடிவிலும் கட்சி தலைமையும் எம்.பிக்களும் ஒருமித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்ற முக்கிய நிபந்தனை என்பன மீறப்பட்டுள்ளதோடு - முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரும் எதிர்பார்ப்பான ஜனாஸா எரிப்பு நிறுத்தப்படாமை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் - எம்.பிக்கள் சுய விளக்கமளிக்க வேண்டுமெனவும் கேட்கப்பட்டது.
     
    இதன்போது விளக்கமளித்த எம்.பிக்கள் - தமது கருத்துக்களை முன்வைத்ததோடு - 20 ஆவது திருத்தத்தின் போது தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி - அரசாங்கம் தம்மை ஏமாற்றிவிட்டதாக தாம் உணர்வதாகவும் - அதற்காக உயர்பீடத்திடம் மன்னிப்பு கேட்பதாகவும் மக்களிடமும் தாம் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் கூறினர். 
     
    ஆனால்....
     
    (நாளை தொடரும்)
     
    (காரசாரமான சில விவாதங்களை கூறுவதை தவிர்த்து சுருக்கமாக பதிவிடுகிறேன். இது நேற்றைய உயர்பீடக்கூட்டத்தின் பின்னர் விரக்தியுற்று கருத்துக்களை பதிவிடும் உண்மையான போராளிகளுக்கான தகவலாகவே பகிரப்படுகிறது.  இதில் தனிப்பட்டரீதியில் எனக்கெதிராக எதிர்வினையாற்ற யாராவது முனைந்தால்; இன்னும் ஆழமாக போகவும் நான் தயார் என்ற விடயத்தையும் கூறி வைக்க விரும்புகிறேன்)

     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நேற்று மு.கா உயர்பீடத்தில் நடந்தது என்ன?.... பாகம்: 01 Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top