• Latest News

    February 14, 2021

    எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் ஆன்மாக்களின் பேரில்; முஸ்லிம் எம்.பிக்களிடம் ஒரு வேண்டுகோள்.....

    உங்கள் மன அழுத்தம் விளங்குகிறது. நீங்கள் செய்த துரோகத்தை நீங்களே நன்றாக புரிந்துள்ளது தெரிகிறது. மக்களிடமிருந்து தப்பிக்க வழி தேடுவது புரிகிறது. உங்கள் பதட்டம் அதனை காட்டிக்கொடுக்கிறது. துரோகம் அப்படித்தான். உள்ளுக்குள் இருந்து உறுத்திக்கொண்டே இருக்கும். நிம்மதியை விலைகேட்கும். நாங்கள் என்னதான் செய்ய முடியும்?.....
     
    எரிப்பு தடை அறிவித்தலை விட உங்கள் அறிக்கைகளே நிறைந்து கிடந்தன. பிரதமரை விட உங்கள் பிரயத்தனமே மேல் என்றீர்கள். பெயர் வைப்பதற்கே பெருமெடுப்பில் தொடங்கினீர்கள். ஒவ்வொரு முறையும் இப்படித்தான். சாதகம் கொஞ்சம் தெரிந்தால் சாதனையாளராக உருவெடுப்பீர்கள். சப்பென்று போனால் சத்தமில்லாமல் ஒதுங்கிக்கொள்வீர்கள். வெட்கமில்லையா? உங்களுக்கே இதில் வெறுப்பு வரவில்லையா?....
     
    20 க்கு கையுயர்த்த வேண்டாமென்று இரண்டு மணி நேரம் போதித்தோம். உயர் பீடமே உறக்கம் மறந்து விவாதித்தது. நள்ளிரவில் பன்னிரண்டு மணிதாண்டியே எங்கள் பணி முடிந்தது. பலர் விளக்கினர். சிலர் சீறிக்கூட பாய்ந்தனர். அரசுக்கு அடிமையாக வேண்டாம் என்றனர். அதிகாரம் ஒருவரிடமிருப்பது ஆபத்து என்றனர். கேட்டீர்களா?.....
     
    இரகசிய சந்திப்புக்கள் நடந்தன. இனிப்பான செய்திகளை சொன்னார்கள். காசு கொடுத்தார்கள். பதவிகள் பற்றி பல விடயங்கள் சொன்னார்கள். தலைவர்கள் இல்லையென்றால் தாம் மட்டும் வாருங்கள் என்றார்கள். போனீர்கள். சமூகத்தை ஏமாற்றி போனீர்கள். நம்பிக்கை துரோகம் செய்து போனீர்கள். அமானித்தை அலட்சியம் செய்து போனீர்கள். அல்லாஹ்வை மறந்து போனீர்கள்.
     
    இப்போது?.....
    ஜனாஸாக்களின் பேரில் தப்பிக்க முனைகிறீர்கள்.
     நீங்கள் 20 க்கு கையுயர்த்தியது 2020 அக்டோபர் 22 யில்.
     அன்று எரிப்பதை நிறுத்தி இருந்தால்; அதுக்கு நீங்கள் உரிமை கோரி இருக்கலாம்.
     இன்று 2021 பெப்ரவரி.
     இதுவரை நிறுத்தவில்லை.
     எப்போது நிறுத்துவார்கள் என்று இன்னும் தெரியவில்லை.
     உங்களுக்கும் இதுவரை No idea.
     வீதிக்கு மக்கள் வந்தது ஏன்?
     கபன் சீலை கட்டியது ஏன்?
     தலைவர்கள் கனத்தைக்கு முன் களமிறங்கியது ஏன்?
     எதிர்க்கட்சி தலைவர் கூட எதிர்ப்பை காட்டியது ஏன்?
     முஸ்லிம் நாடுகள் முடுக்கிய அழுத்தம் ஏன்?
     சர்வதேசம் சலசலத்தது ஏன்?
     ஐ.நா அறிக்கை விட்டது ஏன்?
     மனித உரிமை ஆணையகம் மடித்து கட்டி நிற்பது ஏன்?
    உங்களால் முடியாததால்தானே?
    உங்கள் இயலாமையினால்தானே?
    உங்கள் கையறு நிலையால்தானே?...
     அத்தனையும் நடந்தது அந்த அக்டோபர் 22 க்கு பின்னர்தானே!
     நீங்கள் கையுயரத்திய பின்னர்தானே!
     இத்தனையும் நடக்காமல் ஜனாஸா எரிப்பு நிறுத்தப்பட்டிருந்தால் நீங்கள்தான்..
     உண்மையான உரிமையாளர்கள் நீங்களேதான்.
     மறுக்க முடியாது.
    ஆனால், தலைக்கு மேல் வெள்ளம் போயிட்டே!
    அப்படி இருந்தும், தரங்கெட்டு உரிமைகொண்டாட வெட்கம் வரவில்லை?...
    ஒவ்வொரு முறையும் உங்கள் அறிக்கைகளால் அவமானப்படுவது நீங்கள்தான்.
    உரிமை கொண்டாட கிழம்பி மூக்குடைவதும் நீங்கள்தான். அல்லாஹ் உங்களை கேவலப்படுத்துவதை எப்போதுதான் உணர்வீர்களோ. அசத்தியம் அழிந்துதானே தீரும். உங்கள் மனதிலும் நாவிலும் இருக்கும் அசத்தியம் மட்டும் எப்படி உயிர்வாழும்?
    வேதனைப்படுகிறோம்.
     ஒரு முறை வாக்குகளை பெற்றுவிட்டு எம்மை ஏமாற்றி 20 க்கு கையுயர்த்தினீர்கள்.
     மறுமுறை ஜனாஸா எரிப்பின் பேரில் எம்மை ஏமாற்ற வருகிறீர்கள்.
    இன்னும் எத்தனை முறைதான் எம்மை ஏமாற்றுவதாக திட்டம்?
    உங்களுக்கு வாக்களித்தற்கு இதுதான் கைமாறா?
    உங்களில் நம்பிக்கை வைத்ததற்கு இதுதான் பரோபகாரமா?
    எரிக்கப்பட்ட ஒவ்வொரு ஜனாஸாவின் ஆன்மாக்களின் பேராலும் கேட்கிறோம்;
    அல்லாஹ்வுக்காக இனி அறிக்கை விடாதீர்கள்.
    ரொம்ப அருவருப்பாக இருக்கிறது.

     

     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் ஆன்மாக்களின் பேரில்; முஸ்லிம் எம்.பிக்களிடம் ஒரு வேண்டுகோள்..... Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top