கொரோனா
தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களின் இறுதி கிரியை தொடர்பாக நியமிக்கப்பட்ட
புத்திஜீவிகள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விபரத்தை
வெளியிட்டார் குறித்த புத்திஜீவிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் ஜெனிஃபர்
பெரேரா.
இதன்படி கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வதற்கு தமது குழு அனுமதி வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு விசேட பரிந்துரைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் இறுதி கிரியைகளை நடத்தும் விதம் குறித்து ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சின் செயலாளர் முனசிங்க, கடந்த டிசம்பர் மாதம் விசேட புத்திஜீவிகள் குழுவொன்றை நியமித்திருந்தார்.
இந்த குழுவின் அறிக்கை உரிய தரப்பிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment