அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பூரண ஆதரவுடன் இறக்காம பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஜெமீல் காரியப்பர் பதவியில் அமர்த்தப்பட்டார்.
இறக்காமம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக எம்.எஸ்.ஜெமீல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தவிசாளர் பதவியை ஜே.கே.றஹ்மான் இழந்தார்.
இதனால், புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்காக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மணிவண்ணன் தலைமையில் 2021.02.12ஆம் திகதி இறக்காமம் சபை கூடியது.
இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களின் ஆதரவுடன் எம்.எஸ்.ஜெமீல் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதுறுத்தீன் அவர்களின் வழிகாட்டலுடன் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பிரதி அமைப்பாளருமான எம்.ஏ.எம்.தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார பீடத்தின் உறுப்பினருமான அன்ஸில், இறக்காம பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.எல் நௌபர் (மௌலவி) ஆகியோர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஜெமீல் தவிசாளராக தெரிவு செய்யப்படுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment