• Latest News

    June 01, 2021

    இன்றுடன் 350 கொரோனா ஜனாஸாக்கள் நல்லடக்கம் - இன்று மட்டும் 20 உடல்கள் அடக்கம்

     -நஜிமிலாஹி- 

    இதுவரையும் 375 கொரோனா மரணங்கள்,, "கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மஜ்மா நகரில்" அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

    இன்று (01.06.2021) 20 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இதில் ஒருவர் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர். 19 ஜனாஸாக்களும் 01 கிறிஸ்தவ கொரோனா மரணமும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் ஜப்னா முஸ்லிம்முக்கு தெரிவித்தார். 

    இதன்படி 350 ஆக முஸ்லிம்களின்  ஜனாஸாக்கள் அதிகரித்துள்ளது. 

    அந்தவகையில் 10 கிறிஸ்தவ மரணங்களும் 09 இந்து மரணங்களும் 04 பௌத்த மரணங்களும் 02  வெளிநாட்டவர்களின் மரணங்கள் என்றவாறு  மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் மேலும் குறிப்பிட்டார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்றுடன் 350 கொரோனா ஜனாஸாக்கள் நல்லடக்கம் - இன்று மட்டும் 20 உடல்கள் அடக்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top