• Latest News

    June 01, 2021

    மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அரசியல் கைதியாக வைக்கப்பட்டுள்ளார் - சாணக்கியன் எம்.பி தெரிவிப்பு

     மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அரசியல் கைதியாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை அதிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

    மட்டக்களப்பில் உள்ள ஊடக அமையத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    மாவட்ட அரசாங்க அதிபர் பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்களிடம் அரசியல் கைதியாகச் சிக்கியுள்ளார்.

    மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கூட்டங்களுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை.

    பிள்ளையான் முன்னாள் முதலமைச்சராக இருந்தபோது பாசிக்குடாவில் உருவாக்கப்பட்டுள்ள ஹோட்டல்களில் கூட ஒரு தமிழருக்கு நியமனத்தினை வழங்க முடியாதவர்கள் துறைமுக நகரில் மட்டக்களப்பினை சேர்ந்தவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று கூறுகின்றார்கள். இதனை எவ்வாறு நம்புவது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அரசியல் கைதியாக வைக்கப்பட்டுள்ளார் - சாணக்கியன் எம்.பி தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top