• Latest News

    June 02, 2021

    கிழக்கில் கொவிட் தடுப்பூசி ஏற்றல்

    கொவிட் - 19 நோய்க்கு எதிரான தடுப்பூசியேற்றல் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

    இதற்கமைய மாகாணத்திலுள்ள அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்ட மக்களுக்கு சீனாவின் சினோபாமா தடுப்பூசி ஏற்ப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    இதேவேளை, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, ஹம்பாந்தோட்டை, பதுளை, அநுராதபுரம், புத்தளம், மொனராகலை மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களிலும் செய்வாய்க்கிழமை கொவிட் - 19 தடுப்பூசியேற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கில் கொவிட் தடுப்பூசி ஏற்றல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top