• Latest News

    June 02, 2021

    கண்டி-பல்லேகல பகுதியில் பணியாளர்கள் பலர் மயங்கி விழுந்தமையினால் பதற்ற நிலை!

    கண்டி-பல்லேகல பகுதியில் பணியாளர்கள் பலர் மயங்கி விழுந்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்லேகல முதலீட்டு ஊக்குவிடப்பு வலயத்திலுள்ள ஆடைக் கைத்தொழில் சாலையில் கடமையாற்றும் பணியாளர்களில் 74 பேர் திடீரென சுகயீனமடைந்துள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

    குறித்த 74 பேரும் வாந்தி மற்றும் தலைவலி காரணமாகவே அவதிப்பட்டுள்ள நிலையில், மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு சுகவீன மடைந்தவர்களுக்கு கோவிட் தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. எனினும், தடுப்பூசிக்கும் இவ்வாறு நோய்வாய்ப்பட்ட​தற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.

     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கண்டி-பல்லேகல பகுதியில் பணியாளர்கள் பலர் மயங்கி விழுந்தமையினால் பதற்ற நிலை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top