(எம்.எம்.சில்வெஸ்டர்)
கொரோனா ஒழிப்புக்கான சுகாதார
விதிமுறைகளை பயன்படுத்தி அரசாங்கம் பொது மக்களை நசுக்குகின்றது. சுகாதார
விதிமுறைகள் என்பது வெறும் கட்டுபாடு என்பது மாத்திரமே தவிர அவை
சட்டமாகாது என கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள்
சந்திப்பின்போது இளம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான சட்டத்தரணி
சுவஸ்திக்கா அருலிங்கம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்துக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறுபட்ட சட்டத்தரணிகள்
சங்கம் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை
எடுத்துரைத்ததுடன், அரசாங்கத்துக்கும், பொலிஸாருக்கும் எதிராக பல்வேறு
குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.இதன்போது அங்கு கருத்து தெரிவித்த இளம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் சுவஸ்திக்கா அருலிங்கம்,
" பத்தரமுல்லையில் நேற்யை தினம் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்த 33 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்கியிருந்த பின்னரும், அவர்களை பொலிஸார் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டு பொது மக்களையே கட்டுப்படுத்கின்றனர்.மேலும், கொரோனா ஒழிப்புக்கான சுகாதார விதிமுறைகளை பயன்படுத்தி அரசாங்கம் பொது மக்களை நசுக்குகின்றது. சுகாதார விதிமுறைகள் என்பது வெறும் கட்டுபாடு என்பது மாத்திரமே தவிர அவை சட்டமாகாது " என்றார்.
ஓர் ஜனநாயக நாடொன்றில் இவ்வாறு பொதுமக்களை அடாவடித்தனமாக நடத்துவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என சட்டத்தரணி சுவஸ்திக்கா அருலிங்கம் குறிப்பிட்டார்.
"ஜனநாயக நாடொன்றில் நாட்டின் பிரஜைகளை இவ்வாறு தண்டிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் அவசகால சட்டம் , தீவிரவாத தடுப்பு சட்டம் ஆகியன காணப்பட்டபோதுகூட பொது மக்கள் இவ்வாறு கடுமையாக நசுக்கப்படவில்லை. ஓர் ஜனநாயக நாடொன்றில் இவ்வாறு பொது மக்களை அடாவடித்தனமாக நடத்துவதை இளம் சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது " என்றார்.
Virakesari -
0 comments:
Post a Comment