ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கத்தினரின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்மையால் தோல்வியடைந்துள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் நிகழ்நிலை கற்பித்தலில் இருந்து விலகி முன்னெடுத்துள்ள போராட்டத்தை தொடர்வதாக இலங்கை ஆசிரிய சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வேதனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கடந்த 12 ஆம் திகதி தொடக்கம் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
இப்போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று கல்வி அமைச்சில் இடம் பெற்றது.
பேச்சுவார்த்தையின் போது ஆசிரிய மற்றும் அதிபர் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இப்பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம் பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர், ஆசிரியர்கள் எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும். என்பதை வலியுறுத்தி தற்போது முன்னெடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீர்வு கிடைக்கும் வரை ஆசிரியர்கள் நிகழ்நிலை ஊடான கற்பித்தலில் ஈடுப்பட மாட்டார்கள். என்றார்.
0 comments:
Post a Comment