கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு இருக்கவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மாத்திரம் அவர்களின் ஆதரவு எமக்கு கிடைத்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கே இருந்து வந்தது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை பெற்ற பெற செய்ய அவர்கள் ஓரளவுக்கு ஆதரவை வழங்கினர். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வதுடன் அதனை மதிக்கின்றோம்.
எங்களுடன் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஓரளவுக்கான ஆசனங்களை கைப்பற்றியது.
இல்லையென்றால் இரண்டு அல்லது மூன்று ஆசனங்களே அந்த கட்சிக்கு கிடைத்திருக்கும். இதுதான் உண்மை. எனினும் நாங்கள் தனியான கட்சியாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
தீர்மானங்களையும் எடுக்க முடியும். சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருக்கலாம் அல்லது விரும்பினால் செல்லலாம்.
அதற்கு எந்த தடையும் இல்லை. இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசாங்கத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படாது.
சிறிய தரப்பினரே அந்த கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர் எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment