• Latest News

    July 12, 2021

    பிறக்கும் போது அமைச்சுப் பதவியுடன் பிறக்கவில்லை - எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில

    தாம் பிறக்கும் போது அமைச்சுப் பதவியுடன் பிறக்கவில்லை எனவும் இறக்கும் போது அதனை எடுத்துச் செல்லப் போவதுமில்லை எனவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

    இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில்…

    “நான் பிறக்கும் போது அமைச்சுப் பதவிகளுடன் பிறக்கவில்லை, இறக்கும் போது பதவிகளை எடுத்துச் செல்லப் போவதில்லை.

    நான் செய்த நல்வினைகளை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். இந்த நிச்சயமற்ற உலகில் அமைச்சுப் பதவி மற்றும் நிச்சயமானது என நான் கருதவில்லை. பிரதமரின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதியினால் எந்தவொரு அமைச்சினையும் யாருக்கும் கொடுக்க முடியும்.”

    “நான் வாழ்க்கையில் எப்போதும் பயந்தவன் கிடையாது, உங்களுக்கு என் மீது நம்பிக்கையில்லை என்றால் என்னுடைய அம்மாவிடம் கேளுங்கள். நான் எதற்கும் எப்பொழுதும் பயந்ததில்லை.

    நான் எல்லா சந்தர்ப்பங்களிலும் பதற்றமடைந்தில்லை. எனது முகத்தில் பயம், சோகம் இழையோடியதனை நீங்கள் பார்த்திக்கின்றீர்களா நான் ஒருபோதும் அப்படி பயப்பட்டதில்லை.”

    “நான் அரசாங்கமல்ல எரிபொருட்களின் விலையை தனித்து அதிகரிப்பதற்கு, அவ்வாறு யாரேனும் நான் மட்டும் எரிபொருள் விலையை அதிகரித்தேன் எனக் கூறினால் அவர்கள் என்னை அரசாங்கமாக கருதுகின்றார்கள் அது எனக்கு மகிழ்ச்சியே.”

    அமைதியாக இருப்பதும் ஓர் வகையிலான கருத்து வெளிப்பாடாகும் என அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிறக்கும் போது அமைச்சுப் பதவியுடன் பிறக்கவில்லை - எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top