• Latest News

    August 11, 2021

    நேற்று 124 பேர் கொவிட் தொற்றினால் மரணம்

    நாட்டில் நேற்று (10.08.2021 ) மேலும் 124 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

    அதன்படி இலங்கையில் இதுவரை  5,464 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

    நேற்றையதினம் உயிரிழந்தவர்களில் 49 பெண்களும் 75 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

    இன்றையதினம்  2,890 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

    இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 341,982 ஆக அதிகரித்துள்ளது.

    அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,244 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

    அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 300,406 ஆக அதிகரித்துள்ளது.

    அதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 300,000 கடந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நேற்று 124 பேர் கொவிட் தொற்றினால் மரணம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top