• Latest News

    August 11, 2021

    கோவிட் வைரஸ் பரவலுக்கு ராஜபக்சர்களின் கொத்தணி என்று பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும் - பாட்டலி சம்பிக்க ரணவக்க

     கோவிட் வைரஸ் பரவலுக்கு பல்வேறு மாறுப்பட்ட பெயர்களை சூட்டுவது பொருத்தமற்றது. எனவே ராஜபக்சர்களின் கொத்தணி என்று பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

    கோவிட் தொற்று பரவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

    நாட்டு மக்கள் இனிவரும் காலங்களில் ஒரு சில ஊடகங்களின் போலியான பிரசாரத்திற்கு ஏமாந்து மூடர்களிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்காமலிருக்க வேண்டும்.

    விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளை புறக்கணித்து ராஜபக்சர்கள் தான்தோன்றித்தனமாக செயற்பட்டதன் விளைவை நாட்டு மக்கள் இன்று எதிர் நோக்குகின்றனர்.

    யுத்தத்தை வெற்றிக் கொண்டதை போன்று கோவிட் -19 வைரஸ் தாக்கத்தையும் வெற்றிக் கொள்ளலாம். என கருதி ஆட்சியாளர் தன்னிச்சையாக செயற்பட்டதன் விளைவை இன்று நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ளார்கள்.

    அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவத்தினால் இன்று நாடு பொருளாதாரம், சுகாதாரம், மக்களின் வாழ்வாதாரம் என அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

    ஜனவரி மாதமளவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை கருத்திற் கொண்டே அரசாங்கம் முறையான சுகாதார வழிமுறைகளை செயற்படுத்தாமல் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துகின்றது.

    மிகுதியாகியுள்ள நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் ஊடக கண்காட்சியை நடத்தும் கோவிட்-19 வைரஸ் ஒழிப்பு செயலணியை நீக்கி வைத்திய நிபுணர்களின் தலைமையிலான குழுவை நியமித்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முறையான நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும். இல்லாவிடின் நாட்டு மக்கள் அனைவரும் உயிரிழக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கோவிட் வைரஸ் பரவலுக்கு ராஜபக்சர்களின் கொத்தணி என்று பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும் - பாட்டலி சம்பிக்க ரணவக்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top