கொவிட்-19 தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 48.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே , தற்போது நாடு ஆபத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர், இலங்கையில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை விகிதம் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 48.8 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
கொவிட் -19 க்கு ஒரே தீர்வு நோய் பரவாமல் தடுப்பதே. இந்த மாதம் மிகவும் ஆபத்தானது. எனவே வீட்டிலேயே இருங்கள், சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டல்களை கடைபிடியுங்கள், உங்களை பாதுகாக்க கற்றுக்கொள்ளுங்கள், தேவையற்ற பயணங்களை நிறுத்துங்கள், தேவையற்ற நிகழ்வுகளை நிறுத்துங்கள், அநாவசியமாக உறவினர்களை சந்திப்பதை நிறுத்துங்கள் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
0 comments:
Post a Comment