நாட்டில் இன்றைய தினம் மேலும் 2,382 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் உறுதிபடுத்தப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 347,500 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 2,173 நபர்கள் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதனால் மீட்பு எண்ணிக்கையும் 304,628 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 37,252 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3,384 பேர் கொவிட் தொற்று சந்தேகத்தில் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதுடன், 5,620 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
0 comments:
Post a Comment