2020 மார்ச் மாதம் ஆரம்பமான முதலாவது அலையில் 13 மரணங்கள் மாத்திரமே பதிவாகியிருந்த நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 3394 ஆகவே காணப்பட்டது.
அதனையடுத்து 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஆரம்பமான இரண்டாவது அலையில் 596 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு , 95 948 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவற்றுடன் ஒப்பிடும் போது மூன்றாவது அலையில் காணப்படும் தரவுகளானது டெல்டா திரிபு பரவலுடன் உருவாகியுள்ள அபாய நிலைமையை தெளிவுபடுத்துவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
அத்தோடு இவ்வாறான நிலைமையில் தற்போது போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமையானது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போன்று கொவிட் பரவலை மேலும் தீவிரமடையச் செய்ய வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம் சுட்டடிக்காட்டியுள்ளது.
அபாய நிலையில் மேல் மாகாணம்
தற்போது நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போதிலும் , மேல் மாகாணமே அதிக அபாயமுடைய பகுதியாகக் காணப்படுவதாக விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேல் மாகாணத்தின் கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இனங்காணப்படாத டெல்டா தொற்றாளர்கள் அதிகளவில் காணப்படக் கூடும் என்று இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
கொவிட் பரவல் இரண்டாம் அலையின் பின்னர் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 71 078 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதே போன்று கம்பஹாவில் 55 864 தொற்றாளர்களும் , களுத்துறையில் 31 889 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் இந்த மாவட்டங்களிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். நேற்று முன்தினம் கம்பஹாவில் 668 தொற்றாளர்களும் , கொழும்பில் 280 தொற்றாளர்களும் , களுத்துறையில் 274 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment