மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைசேனை, புகையிரத
வீதியில் வைத்து 48 போதை மாத்திரைகளுடன் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை
இன்று வியாழக்கிழமை (05) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்
தெரிவித்தனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சம்பவதினமான இன்று வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரோடு இணைந்து குறித்த போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது மறைத்துவைக்கப்பட்டிருந்த 48 போதை மாத்திரைகளுடன் போதைப் பொருள் வியாபாரியை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment