இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டுமெனின், கொரோனா செயலணியிடம் இருந்து அந்த கடமைகளை ஸ்ரீலங்கா அமைச்சரவை பொறுப்பேற்பதோடு, அதற்கென விசேட குழு ஒன்றை அமைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
டெல்டா இன்று உளகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இன்று நாம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளோம்.
எனினும் எம்மால் முடியும். நிதி ஒதுக்கீடுகளுக்குச் செல்ல வேண்டும். முடியுமான இடத்தில் அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள். அதற்கு நாடாளுமன்றத்தில் பின்னர் அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்.
இராணுவமும் பொறியியலாளர் கூட்டுத்தாபனமும் இணைந்து இதனை செயற்படுத்த முடியும். வைத்தியசாலைகளுக்கு அருகில் இதனை அமைக்க முடியும். எங்களுக்கு உதவ முடியும்.
பிரதி சுகாதார பணிப்பாளரின் கருத்துடன் இணங்க வேண்டிய நிலைமை குறித்து நாம் கவலையடைகின்றேன், கொரோனா தொற்று தடுப்பு செயலணி இருக்கும் வரையில் நாம் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இத நடக்கப்போவது இல்லை.
ஆகவே அமைச்சரவை இதனை பொறுப்பேற்று குழு ஒன்றை அமையுங்கள். இந்த சபைக்கு வாருங்கள். அந்த குழுவிற்கு நாம் உதவுகின்றோம். இது இன்று தோல்வியடைந்துள்ளது. சரியாக இதனை முகாமைப்படுத்த முடியாமல் போயுள்ளது.
கொள்முதல் கொள்கையொன்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இறுதியில் அரச கணக்கு குழுவே இதுத் தொடர்பில் ஆராயும். தாமதிக்க முடியாது.மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும். இறுதியில் வந்து ஒதுக்கீடு தொடர்பில் பேச வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment