• Latest News

    August 03, 2021

    அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைப்பது ஆபத்தானது!

    அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைப்பது ஆபத்தானது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

    நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றி உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நிறுவனங்கள் அரச நிறுவனங்கள் ஆயத்தம் செய்யும் வரையில் அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    கோவிட் பெருந்தொற்றின் ஆபத்தான நிலைமைகளிலிருந்து விடுபடும் வரையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.

    இந்த நேரத்தில் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் கடமையில் ஈடுபடுத்துவது ஆபத்தானது என பொதுச் சுகாதார பரிசோதகர்களும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

    நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை இரண்டாயிரத்து ஐநூறாகவும், மரணங்களின் எண்ணிக்கை 67 ஆக காணப்படும் நிலையில் அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைப்பது ஆபத்தானது என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    கோவிட்டை கட்டுப்படுத்தும் போர்வையில் உழைக்கும் மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைப்பது ஆபத்தானது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top