• Latest News

    September 13, 2021

    உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் - சஜித் ; தேர்தலை நடத்தக் கோருவோரின் மூளையை ஆராய வேண்டும் - அனுர


    நாட்டின் தற்போதைய சூழ்நிலையால் அரசாங்கம் இனியும் நாட்டை ஆள முடியாது என்பதால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும் என யோசனை முன்வைத்தமை குறித்து  மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக விமர்சித்துள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில், தேர்தலை நடத்தக் கோருபவர்களின்  மூளையை ஆராய வேண்டும் என்றும் இந்த நேரத்தில் செய்ய வேண்டியது பேரழிவைக் குறைக்க மற்றும் அதன் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

    இந்த நேரத்தில் தேர்தலை நடத்துமாறு கேட்போரின் மூளையைப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    பத்தாயிரத்தில் சுமார் 100 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகப் பதிவான போது மற்றும் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று இறப்புகள் பதிவான போது கடந்த பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஆனால், இன்று ஆயிரக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிறார்கள், நூற்றுக் கணக்கானோர் உயிரிழக்கும் சூழ்நிலையில் தேர்தலை நடத்துமாறு கேட்போரின் மூளை பரிசோதிக்கப்பட வேண்டாமா? இந்த நேரத்தில் நாம் அரசாங்கத்துக்கு பேரழிவைக் குறைக்குமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும்  என அவர் தெரிவித்துள்ளார்.

    அதற்கான அழுத்தத்தை நாம் அதிகரிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாமல் இலகுவான முறையில் அதிகாரத்தைப் பெற விரும்புவோரின் கருத்துகளைப் பற்றி நாங்கள் சொல்ல வேறு எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் - சஜித் ; தேர்தலை நடத்தக் கோருவோரின் மூளையை ஆராய வேண்டும் - அனுர Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top