• Latest News

    November 28, 2013

    நிந்தவூர் பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டம் இன்று அங்கிகரிக்கப்பட்டது.

    நிந்தவூர் பிரதேச சபை இன்று காலை 10.15 மணியளவில் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் கூடியது. இன்றைய அமர்வின் போது தவிசாளர் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தினை சபையில் சமர்ப்பித்தார்.
    இதன் போது வரவு-செலவு திட்டம் பற்றி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். 

    உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி கருத்துத் தெரிவிக்கையில் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கு நான் ஆதரவுமில்லை. எதிர்ப்புமில்லை. எனத் தெரிவித்தார். தான் நடுநிலைமை வகிப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து வரவு-செலவு திட்டம் ஏனைய உறுப்பினர்களின் அங்கிகாரத்துடன் நிறைவேற்றப்பட்டது.  இன்றைய சபை அமர்வுக்கு உதவித் தவிசாளர் எம்.எம்.அன்ஸார் சமூகமளிக்கவில்லை.

    நிந்தவூர் பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில்  சுமார் ரூபா 59.7மில்லியன் வருமானமாக பெறப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திடம் இருந்து ரூபா 02மில்லியனும், பொது மக்களின் வரிப் பணத்தில் இருந்து மீதித் தொகையையும் வருமானமாக பெற்றுக் கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் தாஹிர் தெரிவித்தார்.

    உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த வருமானத்தில் 63வீதத்தினை மீண்டெழும் செலவீனங்களுக்கும், உட்கட்டமைப்பு வேலைகளுக்கும், சுகாதார (குப்பை போன்றன) சேவைகளுக்கும் பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும், 36வீத வருமானத்தை மூலதன முதலீடுகளுக்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டம் இன்று அங்கிகரிக்கப்பட்டது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top