• Latest News

    October 17, 2021

    எரிபொருள் வில குறித்து அமைச்சரின் முடிவு

    தற்போதைய நெருக்கடியான நிலையிலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தொடர்ந்தும் கொண்டு செல்ல தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila ) தெரிவித்துள்ளார்.


    திறைசேரியிடமிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டால் மக்கள் மேலும் அசௌகரிய நிலையை எதிர்நோக்க நேரிடும்.

    சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. கனியவள கூட்டுதாபனம் பாரிய நட்டத்தில் இயங்குவதனால் திறைசேரியிடமிருந்து நிவாரணம் கோரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நிவாரணம் கிடைக்காவிட்டாலும் தற்போதைய விலையில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

     எனினும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவலுக்கமைய, அடுத்த மாதம் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தை, தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எரிபொருள் வில குறித்து அமைச்சரின் முடிவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top