இரும்பு பட்டரை நடத்துவதாக கூறி, இந்த நபர் துப்பாக்கிகளை தயாரித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் வசம் இருந்து 5 துப்பாக்கிகள், துப்பாக்கியை தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸார் பட்டரையை முற்றுகையிட்ட போது, சந்தேகநபர் துப்பாக்கி ஒன்றை செய்துக்கொண்டிருந்ததாகவும் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் சில இயந்திர உதிரிபாகங்கள், பட்டரைக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பட்டரைக்குள் இருந்த இரண்டு துப்பாக்கிகள் மாத்திரமல்லாது, 7 துப்பாக்கி குழல்கள், துப்பாக்கி அச்சுகள், துப்பாக்கிகளை தயாரிக்கும் இரண்டு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரிடம் துப்பாக்கிகளை கொள்வனவு செய்த இரண்டு பேர் மூன்று துப்பாக்கிகளுடன் திஸ்ஸமஹாராமை பெரலிஹெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment