• Latest News

    January 30, 2022

    அரசுக்கு எதிரான விமர்சனங்கள் தலை கீழாக மாறும் - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

    அரசுக்கு எதிராக தற்போது விமர்சனங்கள் குவிந்தாலும், இன்னும் ஏழு மாதங்களில் இந்நிலைமை தலை கீழாக மாறும் என்பது உறுதி. அதேபோல் எதிரணிகளின் பகல் கனவும் பழிக்காது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

    "இன்று சமூக வலைத்தளங்கள் பக்கம் சென்றால் அநுரகுமார திஸாநாயக்க தான் அடுத்த ஜனாதிபதி, ஆட்சி அமைப்பது தொடர்பில் சஜித் பேச்சு என்றெல்லாம் பதிவுகள் உள்ளன.

    கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள் தான் நாட்டைச் சீரழித்தனர். நாட்டு வளங்களை விற்பனை செய்தனர். சமூகவலைத்தளங்கள் ஊடாக அரசுக்கு எதிராக பிரசாரம் முன்னெடுக்கப்பட்டாலும் இன்னும் 6, 7 மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறும்.

    கடந்த ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டிவரும். இந்த ஆட்சியின் கீழ் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றது. அதனால் தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர்" என்றும் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசுக்கு எதிரான விமர்சனங்கள் தலை கீழாக மாறும் - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top