உலகளாவிய ரீதியில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் நபர்களின் வீகிதங்களை கொண்ட முன்னிலை நாடுகளில் இலங்கையும் ஒன்றாக மாறியுள்ளது.
இலங்கையில் ஒரு நாளைக்கு மூன்று உயிரிழப்புகள் இவ்வாறு பதிவாவதுடன், வருடாந்தம் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 800 க்கும் அதிகமாக கணக்கிடப்பட்டுள்ளது.இது இவ்வாறிருக்க எட்டம்பிட்டி , உமா ஓயா - கெரண்டிஎல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது.
எட்டம்பிட்டி பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலில் 3 யுவதிகளினதும், ஒரு இளைஞரதும் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதோடு, காணாமல்போயுள்ள பிரிதொரு நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எட்டம்பிட்டி ஏ கிங்ரோஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய செல்வகுமார் ஹரிமலாதேவி, எட்டம்பிட்டி முதலாம் பிரிவைச் சேர்ந்த 21 வயதுடைய ஜெயராம் காஞ்சனாப்பிரியா, லிந்துல - நாஹகலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சடையப்பன் சந்திரலேகா ஆகிய யுவதிகளும் , எட்டம்பிட்டி 2 ஆம் பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய வனராஜா டேவிட்குமார் என்ற இளைனுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
எட்டம்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment