சர்வோதயபுரம் அல்-அமீன், அல் அப்சான் சமூர்த்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்த இந் நிகழ்வு பொத்துவில் சர்வோயபுரம் பல்தேவைக் கட்டிட வளாகத்தில் இடம்பெற்றது.
சங்கத்தின் தலைவர் எம்.ஐ.லாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சமூர்த்தி பயனாளிகள் மற்றும் கிராமவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, உத்தியோகத்தரின் இன,மத,பேதங்களற்ற நேர்மையான சேவைகளையும் தனது கிராமத்தின் மீது கொண்ட நற் சிந்தனைகளையும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து, பொன்னாடை போத்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தனக்கு அரசாங்கம் வழங்கப்பட்ட உத்தியோகத்தின் கடமைகளை மிகவும் கண்மியமாகவும், நேர்மையாகவும் செய்து வருகின்றேன். இப்பகுதியில் சுமார் 15 வருடத்திற்கு மேலாக கடமையாற்றியிருக்கின்றேன் தற்போதும் கூட இக் கிராமத்தில் பணியாற்றி வருகின்றேன் அதனடிப்படையில் இம் மக்களின் தேவைகள் என்ன? எவ்வாறான பிரச்சினைகளை பொருளாதார ரீதியாக எதிர்நோக்குகின்றார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதனடிப்படையில் தனது நிருவாகத்தினூடாக மக்களுக்காக வழங்கப்படுகின்ற உதவிகளை மிகவும் சரியாகவே செய்து வருகின்றேன். அரசாங்கத்தினூடாக மக்களுக்காக வழங்கப்படுகின்ற வாழ்வாதார உதவிகளை மிகவும் பயனுள்ளதாக வழங்க வேண்டும் என நினைப்பதோடு இது சம்மந்தமான வேண்டுகோளையும், ஆலோசனைகளையும் கிராமத்தில் கடமையாற்றும் ஏனைய அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள்,அரசியல் பிரமுகர்கள் என பலருக்கும் வழங்கி, எத்தி வைத்து வருகின்றேன். எனது உத்தியோகத்தின் அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் கடமைகளைக் கொண்டு
இம் மக்களுக்கு இன்னும் சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இதற்கான பங்களிப்புகளையும், ஆதரவுகளையும் இப்பகுதியில் வாழ்ந்துவரும் மக்களாகிய நீங்கள் எனக்கு வழங்கி வருகின்றீர்கள்.
அதனடிப்படையில் நீங்கள் இன்று செய்திருக்கும் இந் நிகழவைப் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
இது போன்ற நிகழ்வுகள் பொத்திவில் பிரதேசத்தில் மட்டுமல்ல ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் போது அது உத்தியோகத்தர்களை ஊக்குவிக்கும் முகமாக அமையும் என தெரிவித்த அவர்
இதுவரை பொத்துவில் பகுதியில் இடம்பெறாத இந் நிகழ்வினை ஏற்பாடு செய்து எனது சேவைகளை பாராட்டி என்னை கெளரவித்த இந் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர்கள் மற்றும் கலந்து கொண்ட சமூர்த்தி பயனாளிகள்,சமூக ஆர்வளர்கள் என பலருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என சமூர்த்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.ஏ.வாரித் அவர்கள் நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
சிறப்பாக. இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறுவர்களுக்கான கலை காலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
February 14, 2022
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment