• Latest News

    April 21, 2023

    உக்ரைன் போரில் ரஷ்யாவின் போர் விமானம் சொந்த நகரிலேயே குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

     உக்ரைன் போரில் ரஷ்யாவின் போர் விமானம் தவறுதலாக சொந்த நகரிலேயே குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ரஷ்யாவின் போர் விமானம் Su-34 , உக்ரைனின் எல்லைப்புறத்தில் உள்ள பெல்கோரோட் நகரில் தவறுதலாக குண்டு வீசியுள்ளதாக பிராந்திய ஆளுநர் கிளாகோவ் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த குண்டுவெடிப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளதுடன் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.

    இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்தி வருவதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.

    குண்டுவெடிப்பினை தொடர்ந்து அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

    அதேவேளை, தவறை ஒப்புக்கொண்ட ரஷ்ய இராணுவம், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உக்ரைன் போரில் ரஷ்யாவின் போர் விமானம் சொந்த நகரிலேயே குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top