• Latest News

    April 21, 2023

    நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி : மக்களிடையே இன ஒற்றுமையும் புரிந்துணர்வும் தளைத்தோங்க இந்நாளில் துஆ செய்வோம் - சிராஸ் மீராசாஹிவு

    இலங்கைத் திருநாட்டில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே ஒற்றுமை  புரிந்துணர்வு என்பன தளைத்தோங்க வேண்டுமென இத்திருநாளில் முஸ்லிம்களாகிய நாம் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டுமென மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிஸாளரும், கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  தெரிவித்துள்ளார்.

    நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

    அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

    அல்லாஹ்வுக்காக பல தியாகங்களைச் செய்து 30 நாட்கள் பசியுடன் நோன்பிருந்து இன்று பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உள்ளங்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள். 

    இத்திருநாளில் சமூகத்தின் எழுச்சிக்காக முஸ்லிம்கள் பிரார்த்தனைகளில் ஈடுபடும் அதேவேளை, சிங்கள  தமிழ்  கிறிஸ்தவ உறவை மேம்படுத்திக்கொள்வதற்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். 

    நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாயின் நிலையான சமாதானம் இருக்க வேண்டும். அதில் இன ஒற்றுமை என்பது விசேட அம்சமாகும்.

    இஸ்லாம்   இன ஒற்றுமையை வலியுறுத்துகின்றது அதற்கான நாளாக இன்றைய தினத்தை அமைத்துக் கொள்வோம். எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை சற்று தனிந்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது இது நிலையாக, நிரந்தரமாக அமைந்து மக்கள் நிம்மதியோடும் சந்தோசத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் துனைபுரியவேண்டுமென மேலும் குறிப்பிட்டுள்ளார். 

    கலாநிதி சிராஸ் மீராசாஹிப்                                                                                      கல்முனை மாநகரசபை முன்னாள் முதல்வர்                                                            மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளர்,                                                            ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீட உறுப்பினர்                                                -ஊடகப் பிரிவு -

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி : மக்களிடையே இன ஒற்றுமையும் புரிந்துணர்வும் தளைத்தோங்க இந்நாளில் துஆ செய்வோம் - சிராஸ் மீராசாஹிவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top