• Latest News

    May 17, 2023

    இம்ரான்கானை கைது செய்வதற்கான தடை மே 31 வரை நீடிப்பு

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக மே 9 ஆம் திகதிக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவரை கைது செய்வதற்கு எதிரான விடுக்கப்பட்ட உத்தரவை மே 31 ஆம் திகதிவரை இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது.


    அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. 

    பின்னர், இவ்வழக்கில் இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் முன்பிணை வழங்கி இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில்,  மே 9 ஆம் திகதிக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவரை 31 ஆம் திகதி வரை கைது செய்வதற்கு எதிராக இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இம்ரான்கானை கைது செய்வதற்கான தடை மே 31 வரை நீடிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top