• Latest News

    May 23, 2023

    அலிசப்ரி எம்.பி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் கோரிக்கை

    எம்.எஸ். -                                                கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பாராமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார்.


    புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினரான அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது கைதாகியுள்ளதாக தெரியவருகிறது. 

    3.5 கிலோ கிராம் தங்கத்துடன் அவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 

    மேலும், அவர் தற்போது சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

    இந்த விடயம் தொடர்பில் சற்றுமுன் பாராளுமன்றத்திலும் பேசப்பட்டுள்ளது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவிக்கையில், விமான நிலையத்தில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் மூலமாக அறியக்கூடியதாக உள்ளதுடன் எமக்கும் குறுஞ்செய்தி கிடைத்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறான விடயங்கள் காரணமாகத்தான் அரசியல்வாதிகள் எல்லோரின் மீதும் சேறு பூசப்படுகிறது என கோரிக்கை முன் வைத்துள்ளார்.

    இவரை தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஹர்சன ராஜகருணாவின் கோரிக்கையை தாமும் ஆமோதிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அலிசப்ரி எம்.பி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் கோரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top