அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வேட்பாளரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி களமிறக்கும், அந்த வேட்பாளர் பசில் ராஜபக்சவாகக் கூட இருக்கலாம் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று (04.05.2023) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமும், நான்கு மாதங்களும் உள்ளன.
எனவே, உரிய நேரத்தில் வெற்றி வேட்பாளரை எமது கட்சி பெயரிட்டு அறிவிக்கும், அந்த வேட்பாளர் பசில் ராஜபக்சவாகக் கூட இருக்கலாம்.
0 comments:
Post a Comment