சஹாப்தீன் -                                                                                                                                            2024ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்குரிய திட்டமிடல்களை அரசாங்கத்தரப்பினர் மேற்கொண்டு வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கெபினட் அமைச்சர்கள், பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் ஆகியோர்களை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை தெளிவுபடுத்தியதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
நாட்டின் பொருளாதாரம் பாதக நிலையிலிருந்து தற்போது பூச்சிய நிலைக்கு முன்னேறியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாத்திற்குள் பொருளாதாரத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சர்கள் எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்றும் கேட்டுள்ளார். தங்களின் பிரதேசங்களில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்குரிய தயார்படுத்தலை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றின் அடிப்படையில் பார்க்கின்ற போது 2024ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்குரிய திட்டமிடல்களை ஜனாதிபதி மேற்கொண்டு வருவதாகவே அறிய முடிகின்றது.

 
 
 
 
 
 
 
 
0 comments:
Post a Comment