• Latest News

    June 01, 2023

    விமல் வீரவன்சவிடம் நட்டஈடு கோரி பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா நிபந்தனைக் கடிதம்

    முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம், நட்டஈடு கோரி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நிபந்தனைக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

    சட்டத்தரணி ஊடாக இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தம்மை அவதூறு செய்யும் வகையில் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

    இதனால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சி

    முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சித் திட்டத்திற்கு சவேந்திர உடந்தையாக செயற்பட்டார் என அண்மையில் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

    ஒன்பதில் மறைந்த கதை என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியதாக சவேந்திர தெரிவித்துள்ளார்.

    தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நட்டஈடு செலுத்த தவறினால் வழக்குத் தொடரப்படும் என சவேந்திர சில்வா கடிதம் மூலம் விமல் வீரவன்சவிற்கு அறிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விமல் வீரவன்சவிடம் நட்டஈடு கோரி பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா நிபந்தனைக் கடிதம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top