• Latest News

    June 11, 2023

    கஞ்சாவை வைத்திருந்த இராணுவ வீரர் கைது

     உலர் கஞ்சாவை வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

    ஹம்பகமுவ, தனமல்வில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்போதே 08 கிலோ 05 கிராம் உலர் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

    இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்பலாந்தோட்டை, மயூரபுர பொறியியல் சேவை படைப்பிரிவை சேர்ந்த 24 வயதுடைய பொது சிப்பாய் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    குறித்த உலர் கஞ்சாவை கடத்துவதற்காக வைத்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கஞ்சாவை வைத்திருந்த இராணுவ வீரர் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top