• Latest News

    June 28, 2023

    ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து: அன்பும் அரவனைப்பும் மிகைக்கும் சூழ்நிலை உருவாக வேண்டும் - சிராஸ் மீராசாஹிப்

    தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும்   உலக வாழ்  முஸ்லிம்கள் அனைவருக்கும் இதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் ஈத் முபாரக் !


    இத்தியாகத் திருநாளில் மக்கள் மத்தியில் சாந்தி சமாதானம் சௌபாக்கியம் ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக என்று  கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

    அவர் மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடுகையில் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் நாம் துல் ஹஜ் மாதத்தின் சிறப்பையும் அல்லாஹ்வின் வல்லமையையும்  தியாகத்தையும்  அது எமக்கு பயிற்றுவிக்கும் மானுட விழுமியங்களை நமது நடத்தை மாற்றங்களில் உயிர்ப்பித்து இம்மையிலும் மறுமையிலும் விமோசனம் பெற முயற்சிக்க வேண்டும்.

    இன்று எமது நாட்டுமக்கள் பொருளாதார கஸ்டம் காரணமாக சொல்லொன்னா துயரத்தோடு தமது அன்றாட ஜீவியத்தை நடாத்திச் செல்வதில் மிக கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் இந்த நிலமை முற்றாக நீங்க இத்தியாகத் திருநாளில் இறைவனிடம் இருகரம் ஏந்தி பிராத்திப்போமாக

    இந்நாட்டில் முஸ்லிம்களின் கண்ணியம் பேணவும் மானிடப் பெறுமானங்களும் மனித மாண்புகளும் பாதுகாக்கப்படவும், எம்மிடையே காணப்படும் குரோதங்களும், வெறுப்புணர்வும் பிரதேசவாதங்களும் பகைமையுணர்வும் நீங்கி சகோதரத்துவமும் மனித நேயமும் மானுட உணர்வும் அன்பும் அரவணைப்பும் மனித பாசமும் மிகைக்கும் சூழ்நிலையொன்றுக்காக அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் நாடி நிற்கும்  அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இம்மை மறுமையிலும் சிறக்க. வாழ்வில் வளம் செழிக்க இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்துத்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ஈத்முபாரக்

    கலாநிதி சிராஸ் மீராசாஹிப்

    கல்முனை மாநகர முன்னாள் முதல்வர்

    மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளர்.

    - ஊடகப் பிரிவு -

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து: அன்பும் அரவனைப்பும் மிகைக்கும் சூழ்நிலை உருவாக வேண்டும் - சிராஸ் மீராசாஹிப் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top