• Latest News

    June 09, 2023

    இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளன

    லங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. சுமார் 20 வீதத்தால் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

    இன்றையதினம்(09.06.2023) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே குறித்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் இதனை தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வரும் நிலையில் இதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top