• Latest News

    June 03, 2023

    இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) பெற்றுக் கொள்ளலாம்

    ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

    பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
     

    குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் சட்டவிரோதமாக பணத்தை பெற்றுக்கொண்டு சிலர் கடவுச்சீட்டுக்களை வழங்கி வரும் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 19 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    இந்தநிலையில், ஒருநாள் சேவையின் கீழ் இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) பெற்றுக் கொள்ளலாம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top