53 வயதான இன்சமாம் இதற்கு முன்பு கடந்த 2016 முதல் 2019 வரையில் பாகிஸ்தான் அணியின் தலைமைத் தேர்வாளராக பணியாற்றி இருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இரண்டாவது முறையாக இன்சமாம் உல் ஹக் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட அவரது தலைமையிலான குழுதான் ஆசியக் கிண்ணம், ஒருநாள் உலகக் கிண்ணம் என இரு தொடர்களுக்கு வீரர்களை தேர்வு செய்தது.
இந்த இரு தொடரிலும் பாகிஸ்தான் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.
பாகிஸ்தான் அணி தற்போது நடைபெற்றுவரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை தழுவியது.
தொடர் தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில்தான் தொடர் தோல்விகளுக்கு மத்தியில் இன்சமாமின் இராஜினாமா அறிவிப்பு வந்துள்ளது.
இதேவேளை, இன்சமாமின் இராஜினாமாவுக்கு வேறொரு காரணம் கூறப்படுகின்றது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் ஏஜென்ட்டாக சொல்லப்படும் தல்ஹா ரெஹ்மானிக்கு சொந்தமான "யாசோ இன்டர்நேஷனல் லிமிடெட்" என்கிற தனியார் நிறுவனத்தில் இன்சமாம் பங்குதாரராக உள்ளார்.
இதே நிறுவனம் பாபர் அஸம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முகமது ரிஸ்வான் இந்த நிறுவனத்தின் இணை உரிமையாளர்களில் ஒருவர் என்றும் சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment