• Latest News

    November 02, 2023

    கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

     மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் பல்கலைக்கழக சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை (2) காலை 10 மணியளவில் கிழக்கு பல்கலைக்கழக அரசடி வளாகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கம் என்பன இணைந்து ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து, இன்று மட்டக்களப்பில் கல்முனை வீதி, அரசடியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்னால் 100க்கு மேற்பட்ட பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று காலை ஒன்றுகூடினர்.
    இதில் '107 வீத அதிகரிப்பை எத்தனை காலம் ஏமாற்றுவாய்', 'பொருளாதார பிரச்சினையை தீர்க்க உமக்கு வழியில்லையா', 'புத்திசாலிகளை உருவாக்க ஒதுக்குவதற்கும் காசில்லையோ', 'கல்விமான்களை உருவாக்க அக்கறையில்லை அரசாங்கத்துக்கு', 'ஓய்வூதியத்தை சீராக்கு ஊழியர்களை சமமாக நடத்து', 'ஒரே நாட்டு சட்டத்தில் வேண்டாமே பிரிவினைகள்', 'விற்காதே கல்வியினை அழிக்காதே ஏழைகளின் கனவுகளை', 'வேண்டாமே தனியார்மயமாக்கம்',   'சம்பளப் பிரச்சினைக்கு தீர்வும் இல்லை வெற்றிடங்களை நிரப்பவும் இல்லை', 'வேலை நேரத்தை அதிகரித்து ஊழியர்களை நசுக்க வேண்டாம்', 'தொழிலாளர் உரிமைகளில் கைவைக்கும் அரசாங்கம் புதிது புதிதாய் சட்டம் இயற்றி என்ன செய்யப் போகிறதோ', 'ஊழியர்கள் தினந்தினமும் செத்து செத்து மடிகின்றனர்', 'உழைப்பை சுரண்டும் அரசாங்கம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை', 'அமைச்சரவையும் ஏற்றுக்கொண்ட அதிகரித்த சம்பளத்தை கொடுத்துவிடு; விரைவாக வாழவிடு', 'கல்விமான்கள் வெளியேறி  வெளிநாட்டுக்குச் செல்கின்றனர்; உருவாக்கிய முறைமைகளும் வீணாகிச் செல்கிறது', 'நாட்டுநிலை வங்குரோத்தில் பொதுமக்கள் திண்டாட்டத்தில்', 'அமைச்சர்கள் சுகபோகத்தில் பொதுமக்கள் அதாள பாதாளத்தில்', 'நாட்டுநிலை வங்குரோத்தில் ஆட்சியாளர்கள் நித்திரையில்' என பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    சுமார் ஒரு மணிநேர ஆர்பாட்டத்துக்குப் பின்னர்  கூட்டம் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top