• Latest News

    November 02, 2023

    கணவனின் ஆணுறுப்பை பாக்கு வெட்டியால் வெட்டிய மனைவி

     தனது கணவரான இராணுவ சிப்பாயின் ஆணுறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மனைவியை இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் அனுராதபுரம் யஹலேகம பிரதேசத்தை சேர்ந்த பெண்ணாவார்.

    இவர் பகலில் தனது கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது பாக்குவெட்டி ஒன்றினால் கணவரின் ஆணுறுப்பை வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

    காயமடைந்தவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இதேவேளை,  சந்தேக நபரை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மனநல பிரிவில் அனுமதித்து வைத்திய சோதனைகளை மேற்கொண்டு எதிர்வரும்  17ஆம் திகதி வைத்தியர் சான்றிதழை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கணவனின் ஆணுறுப்பை பாக்கு வெட்டியால் வெட்டிய மனைவி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top