அம்பாறை – பெரியநீலாவணை பகுதியில் தந்தையால் வெட்டி கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த சம்பவத்தில் விசேட தேவையுடைய 29 வயதுடைய ஆண் ஒருவரும் 15 வயதுடைய சிறுமி ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.கொலைக்கான காரணம்
அம்பாறை - பெரியநீலாவணை - பாக்கியதுல் சாலியா பகுதியில் 63 வயதான தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தந்தை கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த கொலை சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



0 comments:
Post a Comment