• Latest News

    March 20, 2024

    கொழும்பு : ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை


    கொழும்பு, கோட்டை பிரதேசத்தில் இன்று (20) மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களைக்  கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

    வாழ்க்கைச்  செலவு அதிகரிப்பு மற்றும் சில வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உட்பட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ‘ஜன அரகல வியாபரய’ (மக்கள் போராட்ட இயக்கம்) இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

    கோட்டை ரயில்  நிலையத்துக்கு  அருகாமையிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டு சென்று கொண்டிருந்தபோதே கலகத்தடுப்பு பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்து அவர்களைக் கலைத்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பு : ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top