• Latest News

    April 08, 2024

    Easy Cash மற்றும் M Cash ஊடாக போதைப் பொருட்கள் விற்பனை

     


    Easy Cash மற்றும் M Cash ஆகியவற்றைப் பயன்படுத்தி போதைப் பொருளுக்கு பணம் செலுத்தும் 198 பேரின் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. 

    குறித்த செயலிகளின் ஊடாக போதைப் பொருட்களை கொள்வனவு செய்து விற்பனை செய்பவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நேற்று(06) முதல் ஆரம்பிக்கபட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையானது, காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனின்  பணிப்புரைக்கமைய நேற்று ஆரம்பிக்கப்பட்டது.அதன்படி, மேலதிக விசாரணையில் 18 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வங்கி கணக்கு பதிவுகள் மற்றும் 71 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தொலைபேசி கோபுர பகுப்பாய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளது.இந்நிலையில், அவற்றின் மூலம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: Easy Cash மற்றும் M Cash ஊடாக போதைப் பொருட்கள் விற்பனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top