• Latest News

    May 26, 2024

    சினேக பூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டி, வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்தது "பவர் பிளயர் 96" அணியினர்.

    - யூ.கே. காலித்தீன் - 

    15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட 
    சினேக பூர்வ மென்பந்து  கிரிக்கட் சுற்றுப் போட்டி நேற்று (25)  கல்முனை சாஹிராக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

    "சஹிரியன்ஸ் 90" அணியினருக்கும் பவர் பிளயர் அணியினருக்குமிடையிலான இச்சுற்றுப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய பவர் பிளயர் 96 அணியின் தலைவர் நஸீர்கான் வெற்றியீட்டி தனதணியினரை துடுப்பெடுத்தாடுவதற்கு இனங்க, நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றனர்.

    துடுப்பாட்டத்தில் நஸ்வி 30 பந்துகளுக்கு ஆட்டமிழக்காமல் 56* ஓட்டங்களையும், தாரிக் சக்காப் 25 பந்துகளுக்கு 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

    பந்து வீச்சில் சனுஸ் காரியப்பர், சதாக்கத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டினையும் கைப்பற்றினர்.  

    127 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய "சகிரியன்ஸ் 90" அணியினர்
    15 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து
    88 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோழ்வியை தழுவினர்.
     
    "சஹிரியன்ஸ் 90" அணிசார்பாக அதிகூடிய ஓட்டமாக பாரிஸ் 24 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்றார்.

    பந்து வீச்சில் பவர் பிளயர் 96 சார்பாக பைசால் 2 விக்கட்டுக்களையும், அஜ்மல், தாரிக் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டினையும் கைப்பற்றினர்.

    சனுஸ் காரியப்பர், சதாக்கத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டினையும் கைப்பற்றினர்.  

    மேலதிக 39 ஓட்டங்களால் "பவர் பிளயர் 96" அணியினர் வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டனர்.

    ஆட்ட நாயகனாக "பவர் பிளயர் 96" அணியின் சார்பாக 30 பந்துக்கு ஆட்டமிளக்காமல் 56* ஓட்டங்களைப் பெற்ற நஸ்வி தெரிவு செய்யப்பட்டார்.


     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சினேக பூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டி, வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்தது "பவர் பிளயர் 96" அணியினர். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top