• Latest News

    May 08, 2024

    பிஜி நாட்டின் உயர் நீதிமன்ற பதில் நீதியரசராக இறக்காம் மொஹமட் அஸ்ஹர் உமரு லெப்பே நியமனம்

    பிஜி நாட்டின் உயர் நீதிமன்ற பதில் நீதியரசராக அம்பாறை மாவட்டம் இறக்காமத்தைச் பிறப்பிடமாக கொண்ட மொஹமட் அஸ்ஹர் உமரு லெப்பே(Mohammed Azhar Umaru Lebbe) பதவியேற்றுள்ளார்.

    பிஜியின் நீதித்துறை மாநில மாளிகையில் அவர் இன்று (08.05.2024) பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பிஜி குடியரசுத் மற்றும் நிதி தலைவர் வில்லியம கட்டோனிவேரால் அவர் தற்காலிக தலைமை நீதிபதி சலேசி டெமோ மற்றும் தலைமைப் பதிவாளர் டோமாசி பைனிவாலு முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்திற்கு முன்னர், நீதியரசர் மொஹமட் அஸ்ஹர் உமரு லெப்பே, 2009 முதல் ஏப்ரல் 2014 வரை இலங்கையின் பல்வேறு நீதிமன்றங்களில் மாஜிஸ்திரேட் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 2014 இல் நாடியில் ரெசிடென்ட் மாஜிஸ்திரேட்டாகத் தொடங்கிய அவர், ஏப்ரல் 2017 முதல் லௌடோகா உயர் நீதிமன்றத்தின் மாஸ்டராகவும் இவர் கற்று 2014 இல் ஐக்கிய இராச்சியத்தின் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (LL.M) பெற்றுள்ளார்.
    மேலும் இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் LL.B (ஹானர்ஸ்) பட்டம் பெற்றுள்ளதோடு, 2000 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிஜி நாட்டின் உயர் நீதிமன்ற பதில் நீதியரசராக இறக்காம் மொஹமட் அஸ்ஹர் உமரு லெப்பே நியமனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top