• Latest News

    May 08, 2024

    உலகில் முதன் முறையாக செயற்கை சூரியனை உருவாக்கி சாதனை!

     உலகில் முதன் முறையாக மறையாத செயற்கை சூரியனை உருவாக்கி ஒரு கிராமம் சாதனை படைத்துள்ளது.

    இத்தாலி (Italy) மற்றும் சுவிட்சர்லாந்து (Switzerland) இடையே அமைந்துள்ள விக்னெல்லா என்னும் கிராமமே குறித்த சாதனையை படைத்துள்ளது.

    200 பேர் வரை வசிக்கும் இந்த கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக சூரியன் மறைந்து, இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தோன்றும் செயல்முறை இடம்பெற்று வருகின்றது. அதன்படி, நவம்பர் 11 ஆம் திகதி முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரையில் சூரிய ஒளி மிக குறைவாகவே கிடைப்பதாக கூறப்படுகின்றது.

    இந்நிலையில், 2005 ஆம் ஆண்டில் சுமார் 1 கோடி ரூபா வரை திரட்டப்பட்டு, ஊர் எதிரே உள்ள மலையில் பிரமாண்ட கண்ணாடி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டில் 1.1 டன் எடையுடைய 1100 மீட்டர் உயரத்தில், மலையின் மேல் 40 சதுர மீட்டர் கண்ணாடியை கிராம மக்கள் நிறுவியுள்ளனர்.

    இவ்வாறு நிறுவப்பட்ட கண்ணாடி மீது குறைந்த அளவு சூரிய ஒளி படும்போது அது ஒளியை தெறிப்படைய செய்வதன் ஊடாக கிராமம் முழுமையாக சூரிய ஒளியை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலகில் முதன் முறையாக செயற்கை சூரியனை உருவாக்கி சாதனை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top