• Latest News

    May 26, 2024

    ஹர்திக் பாண்டியா, தனது மனைவியை விவாகரத்துச் செய்துள்ளதாக தகவல்கள்

     இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவருமான ஹர்திக் பாண்டியா, தனது மனைவியை விவாகரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    ஹர்திக் பாண்டியா 2020ஆம் ஆண்டு செர்பிய நாட்டு நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.


    புகைப்படங்கள் நீக்கம்

    இந்நிலையில் அண்மைய நாட்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடவில்லை. Natasa Stankovic Pandya என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரை வைத்திருந்த நடாஷா, தற்போது பாண்டியா என்பதை மட்டும் நீக்கி விட்டதுடன் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார்.

    அதனால் அவர்கள் விவாகரத்துச் செய்யப் போகின்றார்களா என இணையத்தில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹர்திக் பாண்டியா, தனது மனைவியை விவாகரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top